ஆரல்வாய் மொழி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

" alt="" aria-hidden="true" />


ஆரல்வாய் மொழி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்;


குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி நெடுமங்காடு சாலை மீன்சந்தை பகுதியில் ரோட்டின் இரு பக்கமும் ஏராளமான கடைகள் உள்ளன. இக்கடைகளின் முன்பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து கூரை அமைத்திருந்தினர். இதனால் நெரிசல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ–மாணவிகள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.


இதுகுறித்து  நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் மேற்பார்வையில் சாலை ஆய்வாவாளர் சதாசிவம், சாலை பணியாளர் அருணாசலம் ஆகியோர் 25–க்கும் மேற்பட்ட கடைகள் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


அப்போது ஆரல்வாய்மொழி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ராஜ் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


 அகற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.